அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கூட இருக்கா..?? அட, இது பலருக்கும் தெரியாம போச்சே..! ” அப்ப, வாங்க உடனே பார்க்கலாம்”..!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசு வேலையின் தாக்கம் அதிக அளவில் வளர்ந்துவிட்டன. எப்படியாவது அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று நிரந்தர பணியில் அமர வேண்டும் என்பதற்காக தினந்தோறும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அரசு தேர்வுக்கு போட்டியிடுபவர்கள், தேர்வு பாடங்களை மட்டும் அறிந்திருக்காமல், அரசு வேலை என்றால் என்ன? பணியில் அமர்ந்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? இதர சலுகைகள் உண்டா..இருப்பினும் அவை என்னென்ன? விடுமுறை கிடைக்குமா? என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும்.
அந்த வகையில், அரசு துறையில் பணிபுரிவதனால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது? என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
முதலில், உங்களுக்கு அரசு வேலை கிடைத்து விட்டால், நீங்கள் ஓய்வுபெறும் வயது வரை அது நிரந்தர வேலையாக இருக்கும். மேலும், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே உங்களுக்கு வேலை இருக்கும். பொது அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாளில் விடுமுறை உங்களுக்கு அளிக்கப்படும். இதுமட்டுமின்றி, மெடிக்கல் விடுமுறை, பென்ஷன் மற்றும் வரி சலுகைகள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தனியார் துறையை காட்டிலும் அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பணியில் அமர்ந்து முதல் மாத ஊதியமாக உங்களுக்கு ரூ.18,000-லிருந்து வழங்கப்படுகிறது. இதையெல்லாம் கடந்து, நீங்கள் அரசு வேலையில் பணிபுரிகிறீர்கள் என்றால், தனிப்பட்ட கௌரவம் உங்களுக்கு தானாகவே கிடைக்கும் என்பது 100% உண்மையாகும்
Post a Comment